ராகுல் காந்தியும், சில எதிர்கட்சிகளும், சில சார்பு ஊடகங்களும் தொடர்ந்து கோவின் செயலியை விமர்சித்து வருகின்றனர். ஆனால், அதன் சிறப்பு, அவசியம், செயல்பாடு குறித்த உண்மையை பல உலக நாடுகள் அறிந்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், மெக்ஸிகோ, ஈராக், உக்ரைன் உள்ளிட்ட சுமார் 20 நாடுகள் இந்த செயலியை தங்கள் நாடுகளில் பயன்படுத்த ஆர்வம் காட்டியுள்ளன. இதற்காக சுகாதார அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் இணைந்து ஒரு மெய் நிகர் சந்திப்பை ‘கோவின் குளோபல் கான்க்ளேவ்’ என்ற பெயரில் வரும் ஜூன் 30 அன்று ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவின் செயலி, ஒரு மேகக்கணினி சார்ந்த தகவல் தொழில்நுட்ப தளம். இது கோவிட் -19 தடுப்பூசி நிகழ்நேர கண்காணிப்புக்கான சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தொடங்கப்பட்டது.