‘கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரிப்பதில் சீனா ஒத்துழைக்கவில்லை என்றால், அதைக் கையாள்வதற்கான வேறு வழிகளைப் பற்றி சிந்திப்போம்’ என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார். மேலும், ‘தற்சமயம், சீனாவுக்கு எவ்விதமான அச்சுறுத்தல் விடுவதையும் அமெரிக்கா பரிசீலிக்கவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் தொடர்ந்து சர்வதேச சமூகத்தில் ஆதரவைத் திரட்ட முயற்சிப்போம், நட்பு நாடுகளுடன் பேசுவோம்’ என தெரிவித்தார். முன்னதாக, தனது நாட்டின் வுஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்பதை சீனா ஒப்புக்கொள்ள மறுக்கிறது என்பதும் அதனை ஆய்வு செய்ய வருகை தந்த உலக சுகாதார அமைப்பினரை தனது ஆய்வகத்திற்கு சீனா அனுமதிக்கவில்லை என்பதும் நினைவு கூரத்தக்கது.