தஞ்சாவூர் சேவப்பநாயக்கன் ஏரி மேல்கரையில், 200 ஆண்டுகள் பழமையான மராட்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தூக்குமேடையை, சிலர் இடித்துவிட்டு அந்த இடத்தை விற்கப் போவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியினர் அங்கு திரண்டு கட்டிடத்தை இடிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பினர். மேலும் தூக்குமேடையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பராமரிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.