புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தொடர்பாக பாரத அரசுடன் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து டுவிட்டர் நிறுவனம் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் (NYSE) டுவிட்டரின் பங்குகளின் மதிப்பு 25 சதவீதம் குறைந்துள்ளது. முன்னதாக, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க மத்திய அரசு அளித்த இறுதி அறிவிப்பை டுவிட்டர் செயல்படுத்தாததால் இடைநிலையாளர் தகுதியையும் சட்டப் பாதுகாப்பையும் இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.