அதிகத் திறனுடைய தடுப்பூசி

பாரதத்தில், தற்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ள, பயாலிஜிக்கல் – இ நிறுவனத்தின் கோர்ப்வாக்ஸ் தடுப்பூசியானது கொரோனாவிற்கு எதிராக 90 சதவீதம் திறனுடையது. கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என தெரியவந்துள்ளது. ‘அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ நிறுவனம் கண்டுபிடித்த ‘நோவாக்ஸ்’ தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 90 சதவீத திறன் பெற்றது. மேலும் விலை குறைவாகவும் இருக்கும். அதனை பாரதத்தில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது. பயாலாஜிக்கல் – இ நிறுவனம் தயாரிக்கும் கோர்ப்வாக்ஸ் தடுப்பூசியும் இதே திறன் பெற்ற தடுப்பூசி. இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது. அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படும் என பயாலாஜிக்கல் இ நிறுவனம் கூறியுள்ளது’ என, மத்திய அரசு அமைத்த கோவிட் கட்டுப்பாட்டுப் பணிக்குழுவின் தலைவரான மருத்துவர் என்.கே அரோரா தெரிவித்துள்ளார்.