தேசத்தின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் பிரத்யேக சரக்கு வழித்தடத்தை இந்திய ரயில்வே சமீபத்தில் உருவாக்கியது. இதனால் சரக்குப் போக்குவரத்தை விரைவாக மேற்கொள்ள முடியும். பாதுகாப்பு படைகளின் போக்குவரத்து திறன், தயார் நிலையை அதிகரிக்க, பிரத்யேக சரக்கு ரயில் வழித்தட கார்ப்பரேஷன், இந்திய ரயில்வே மற்றும் இந்திய ராணுவத்துக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த பிரர்த்தியேக சரக்கு ரயில் வழித்தடத்தில், ரயிலில் ராணுவ வாகனங்கள், தளவாடங்களை அனுப்பி இந்திய ராணுவம் சோதனைகள் மேற்கொண்டது. இது வெற்றிகரமாக நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.