டில்லியில் நடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) தலைவர் சதீஷ் ரெட்டி, கொரோனா இரண்டாம் அலையின்போது, எங்கள் தரப்பில் பல்வேறு நகரங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. தேவைப்பட்டால், மேலும் பல நடமாடும் மருத்துவமனைகள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம். மூன்றாம் அலை உருவானால், அதனை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயாராக உள்ளன. இரண்டாம் அலையில் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், பிரதம மந்திரியின் ‘பி.எம்., கேர்ஸ்’ நிதியில் நாட்டில் இதுவரை 850 இடங்களில் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்தார்.