சமூக வலைதளமான ‘பேஸ்புக்’கில் ஒரு பள்ளி மாணவன் முஸ்லிம்களைப் பற்றி ஒரு சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளான் என்ற செய்தி மேற்கு வங்காளம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பரவியது. செய்தி வெளியான உடனே காவல்துறை அவனைக் கைது செய்தது. ஆனால் முஸ்லிம்கள் 2,000 பேர் திரண்டு அந்த மாணவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அவனுக்கு ஷரியத் சட்டப்படி (கல்லால் அடித்தே கொல்வது) நாங்களே தண்டனை கொடுப்போம் என்றனர். காவல்துறை மறுக்கவே முஸ்லிம்கள் ஹிந்துக்கள் மீதும் அவர்களின் வீடுகளையும், கடைகளையும், சொத்துக்களையும் தாக்கினர். ஏராளமான வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஹிந்துப் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர்.
முஸ்லிம்களின் வாக்கு வங்கி அரசியலை மையமாக வைத்து ஆளும் கட்சி செயல்படுவதால் காவல்துறை கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்தது. இது பற்றி மேற்குவங்க கவர்னர் கே.என். திரிபாதி தொலைபேசியில் முதல்வரைத் தொடர்பு கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தார். நடந்தது இவ்வளவுதான். அவ்வளவுதான். மம்தாவுக்கு சாமியாட்டம் வந்தது. கவர்னர் என்னை மிரட்டுகிறார், கவர்னர் மாளிகை பாஜக அலுவலகம் போன்று செயல்படுகிறது என்றெல்லாம் காட்டமாக அறிக்கை வெளியிட்டார். பத்திரிகைகளும் தொலைகாட்சி ஊடகங்களும் பரபரப்பாக மம்தா அறிக்கையை வெளியிட்டார்களே தவிர அங்கு உண்மையில் நடந்தது என்ன என்பதை மறைத்து விட்டார்கள்.
பல நாடுகளில் மெஜாரிட்டி மைனாரிட்டிகளை துன்புறுத்துவர். இங்கு மைனாரிட்டி மெஜாரிட்டியை ஆட்டிப் படைக்கின்றனர். நாய் வாலை ஆட்டுவது இயல்பு. இங்கோ வால் நாயை ஆட்டுகிறது.
I like vijayabharatham. From 1989, I know vijayabharatham