அதுவும் இதுவும் நான் அல்ல

ஒரு நாள்… விடியற்காலை மூன்று மணி இருக்கும். ஸ்ரீ ரமண மகரிஷியைப் பார்ப்பதற்காக சிலர் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். ஆஸ்ரமத்தில் அந்த காலை நேரத்தில் அங்கே யாரும் தென்படவில்லை. சமையலறை மட்டும் திறந்திருந்தது. அவர்கள் சமையலறைக்குச் சென்றனர். அங்கு ஒருவர் சமையல் பாத்திரங்களைக்

 

கழுவிக் கொண்டிருந்தார். அவரிடம் ஐயா இங்கே பகவான் ரமண மகரிஷி எங்கே இருக்கிறார்?” என்று கேட்டனர்.

 

அதற்கு அந்த மனிதரும் ஓ ரமணரா… இதோ இருக்கிறாரே… இது தான் ரமணர்” என்று சொல்லி தான் கழுவிக் கொண்டிருந்த அண்டாவை அவரிடம் காண்பித்தார். வந்தவர்களோ அவருக்குக் காது கேட்கவில்லை என்று நினைத்து தரிசன கூடத்தில் சென்று அமர்ந்தனர்.

பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் பகவான் வருகிறார் என்ற குரல் கேட்டது. அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர். எல்லோருக்கும் ஆச்சரியம். அதிகாலையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த அந்த மனிதர்தான் வந்து கொண்டிருந்தார். அவர்தான் பகவான் ரமணர் என்று தெரிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு தாளவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, நான் இந்த உடல் அல்ல” என்பதைத்தானே இத்தனை நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்