வங்கிகளில் நடக்கும் கடன் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கணக்குகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் விதிமுறைகள் மீறுதல் மற்றும் மோசடி ஆகியவற்றின் கீழ் தவறுகளைச் செய்துள்ள பேங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றின் மீது ரிசர்வ் வங்கி சுமார் 6 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மார்ச் 31, 2019ஆம் முடிவின் போது சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள், ஜனவரி 1, 2019ல் சமர்ப்பிக்கப்பட்ட பிராடு மானிட்டரிங் ரிப்போர்ட் (FMR) அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தியதில் இந்த வங்கிகள், பணப் பரிமாற்ற லிமிட், DEA நிதி தாமதமான பணப் பரிமாற்றம், கடன் மோசடி குறித்துத் தாமதமாக ரிசர்வ் வங்கிக்குத் தகவல் அளித்தல், போலியான சொத்துக்களை விற்பனை செய்தல் எனப் பல விதிமீறல்கள், ஒழுங்குமுறை இணக்கம் இல்லாமை, வாடிக்கையாளர்கள் உடன் செய்யப்பட்ட பணப் பரிமாற்றம் ஒப்பந்தம் மீறல் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.