காங்கோவில் மூன்றாவது அலை

காங்கோ சுகாதாரத்துறை அமைச்சர் ஜின், ‘காங்கோவில் கரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்.அதிக மக்கள் தொகை கொண்ட தலைநகர் கின்ஷாசாவில் கரோனா அதிகம் பரவி வருகிறது.தற்போது கின்ஷாசா கரோனாவின் மையமாக உள்ளது. கரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு குறைவாக செலுத்தி வருவது, கரோனா விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாமல் இருப்பதே இந்த மூன்றாவது அலை பரவலுக்கு காரணம்” என தெரிவித்துள்ளார். காங்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆப்பிரிக்கக் கண்டத்தில், தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து போன்ற நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.அங்கு இதுவரை 1.7% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.