கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க ரூ.50 ஆயிரம் கோடி நிதியை அவசரகால மருத்துவ சேவைக்காக ரிசர்வ் வங்கி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து, பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைந்து கொரோனா சிகிச்சை கடன் என தனி பிரிவை துவங்கியுள்ளது. அதன்படி, கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு தனி நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம்வரை கடன் வழங்கப்படும் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. மாத சம்பளம் பெறுவோர், இதர பிரிவினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரும் இத்தகைய கடன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். எவ்வித பிணையும் இல்லாமல் இந்த கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.