ஹேமந்த் சோரன் அடித்த யூ டர்ன்

ஜார்க்கண்டில் காங்கிரஸ் துணையுடன் ஆட்சியை நடத்தும் முதல்வர் ஹேமந்த் சோரன், ஒரு மாதத்திற்கு முன்பு 18-45 வயதுக்குட்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் இலவச தடுப்பூசிகள் போடப்படும் என அறிவித்தார். பிறகு அது அரசுக்கு 1,100 கோடி ரூபாய் கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும் என்று கூறி பின்வாங்கியதுடன் மத்திய அரசை அதற்கான தடுப்பூசிகளை இலவசமாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தடுப்பூசி பரவலாக்கலை ஆதரித்து பேசி மாநிலங்களே தடுப்பூசி வாங்கிக்கொள்ளும், அதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என வீராப்பாக பேசிவிட்டு, பிறகு, தடுப்பூசி கொள்முதலை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுதான் மாநிலங்களுக்குத் தர வேண்டும் என பல்டி அடித்தார்.தற்போது அந்த வழியை ஹேமந்த் சோரனும் பின்பற்றுகிறார்.முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கிடைத்த தரவுகளின்படி ஜார்க்கண்ட் 37.3% தடுப்பூசிகளை வீணடித்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.