கிறிஸ்தவர்களை குழப்பும் சுவிசேஷகர்கள்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜின் நைனியில் உள்ள ‘சாம் ஹிகின்போட்டம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின்’ (SHUATS) துணைவேந்தரும் கிறிஸ்தவ சுவிசேஷகருமான பேராசிரியர் ராஜேந்திர பிஹாரி லால், கொரோனா தொற்றுநோய் குறித்து தவறான அறிக்கைகளையும் செய்திகளையும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டு அவரை பின்பற்றுபவர்களில் அறியாமையை பயன்படுத்தி தவறான நம்பிக்கையை ஊக்குவித்து வருகிறார்.

சமீபத்தில், ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிஹாரி லால், ஹிந்துக்களை ஏமாற்ற ஹிந்து துறவிகளை போல, கழுத்தில் ருத்ராட்ச மாலை, காவி உடை அணிந்து, ‘ஏசுவின் பெயரில், கொரோனா வைரஸை விட்டு வெளியேறுமாறு கட்டளையிடுகிறேன். ஏசுவின் பெயரால், நாங்கள் தொற்றுநோயைத் சபிக்கிறோம், அதை உடனே முடிக்குமாறு கோருகிறோம்.உங்கள் அதிகாரத்தை நாங்கள் ரத்து செய்கிறோம்.ஏசுவின் பெயரால், நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ நாங்கள் உங்களை அங்கே அனுப்புகிறோம்.இன்றும் இந்த தருணமும், இந்த நேரத்திலிருந்தே, இந்த தீயசக்தி நாட்டை விட்டு வெளியேறும்” என்று பேசியுள்ளார்.

இவர் இதுபோன்ற பல வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். ஆனால், இப்படி 400 க்கும் மேற்பட்ட வீடியோக்களில் தோன்றியுள்ள இவர், ஆக்சிஸ் வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணப்பறிமாற்றம், பணமதிப்பிழப்பு தொடர்பான மோசடி மற்றும் குற்றவியல் சதித்திட்டங்களில் சம்பந்தப்பட்டவர் என்பதும் இக்காரணங்களால் 2019ல் சிறைக்கு சென்றவர் என்பதும் பலருக்கும் தெரியாது.

இதேபோல, தமிழகத்தை சேர்ந்த ​​‘ஏஞ்சல் டிவி’யின் நிர்வாகியான கிறிஸ்தவ சுவிசேஷகர் சுந்தர் செல்வராஜ், தனது சேனலைப் பயன்படுத்தி ‘கொரோனா தடுப்பூசியில் மைக்ரோ சிப் உள்ளது. தடுப்பூசியில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள், அது சாத்தானின் அடையாளம் ‘என கூறி கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தவறான பிரச்சாரங்களை முன்வைத்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது.