ஆவணமாகும் ஸ்ரீரங்கம் ஓலைச்சுவடிகள்

ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோயில், 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். அந்த கோயிலில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து கணினியில் பதிவேற்றி ஆவணப்படுத்தும் பணிகளை ஹிந்து அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அமைந்த ஓலைச்சுவடிகள் இங்கு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஓலைச் சுவடிகளில் கோயில் பற்றிய வரலாறு, உற்சவங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் தெலுங்கு மொழியில் உள்ளது குறிப்பிடத்தக்கதுது.