பதவியேற்க முடியாத முதல் பெண் பிரதமர்

நியூசிலாந்துக்கும் ஹவாய் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ள சுமார் 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட இரண்டு தீவுகளைக் கொண்ட சிறிய நாடு சமோவா.இங்கு கடந்த 1998 முதல் பிரதமராக இருக்கும் துய்லீபா அயோனோ சைலே மாலிலேகாவோனி, ஏப்ரல் 9ல் நடைபெற்ற தேர்தலில் ஒரு தொகுதி வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.ஆனால் அவர் தன் பதவையை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 51 இடங்களில், ஃபியாம் நவோமி மாதாஃபா என்ற பெண் கடந்த ஆண்டு புதியதாக ஃபாஸ்ட் என்ற கட்சி 26 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மாலிலேகாவோனியின் மனித உரிமைகள் பாதுகாப்புக் கட்சி (HRPP) தாங்கள்தான் 26 இடங்களை வென்றதாகக் கூறிவருகிறது.இதனால் வெற்றி பெற்றும் ஆட்சியமைக்க முடியாமல் முதல் பெண் பிரதமரான மாதாஃபா தவித்து வருகிறார்.சமோவாவின் அரசியலமைப்பின் படி, புதிய பிரதமர் 45 நாட்களுக்குள் பதவியேற்க வேண்டும்.ஆனால், மாதாஃபா கடந்த திங்களன்று மாலிலேகாவோனி கட்சியினரால் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.அவர் நாடாளுமன்றத்திற்குள் சத்தியப்பிரமாணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.இதனால், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரத்தில் மாதாஃபா சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் புதிய பெண் பிரதமர் மாதாஃபாவை ஆதரிப்பதுடன் நாட்டின் சட்ட திட்டங்களை பின்பற்றுமாறு மாலீலகோவோனியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.