சிரத்தாஞ்சலி

பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காரானந்தா அவர்கள் மஹாசமாதி அடைந்தார்கள். சனாதன தர்மத்தின் வழிகாட்டிகளில் தற்காலத்தில் மிகப்பெரும் பங்காற்றியவர் சுவாமிகள். தேனியில் வேதபுரி ஆஸ்ரமம் அமைத்து இறைப்பணியாற்றி வந்தார்கள். திருக்குறளும் கீதையும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகவும் பிரசித்திபெற்றவை. திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தரிடம் தீட்சை பெற்றவர். புதுக்கோட்டை புவனேஸ்வரி ஆஸ்ரம பீடாதிபதியாகவும் உள்ளார். தர்ம ரஷண சமிதி தமிழ்நாடு தலைவராக இருந்து எண்ணற்ற பணிகளை ஹிந்து சமுதாயத்திற்கு ஆற்றி வந்தார்கள். ஹிந்து விரோத போக்கினை வன்மையாக துணிவாக எதிர்த்து கருத்துகளை வெளியிட்டு செயலாற்றி வந்தார்கள். சுவாமிகளின் மறைவு பாரதத்திற்கு குறிப்பாக தமிழகத்திற்குப் பேரிழப்பாகும் என ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் (தென்தமிழகம்) ஆடலரசன் அவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.