ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுனரின் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கை எவ்வித காரணமும் சொல்லாமல் டிவிட்டர் இடைநிறுத்தியது. அதற்கான எந்த விளக்கத்தையும் டிவிட்டர் அளிக்கவில்லை. பின்னர் மெதுவாக சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்பட்டது, விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்த்து. பின்னர் இந்த பிரச்சனையை சரி செய்தது. முன்னதாக, கடந்த ஜனவரி 26 அன்று டெல்லியில் விவசாய போராட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட வன்முறை கலவரத்தை அடுத்து மத்திய அரசு, வெறுப்பு செய்திகள், பொய் செய்திகளை பரப்பும் சில டிவிட்டர் கணக்குகளை நீக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை டிவிட்டர் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. பின்னர் மத்திய அரசின் செயலாளர் எச்சரித்த பின்பே நடவடிக்கை எடுத்தது டிவிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.