சென்னை, பள்ளிக்கரணையில், கடந்த 2019ல் பிளக்ஸ் பேனர் விழுந்ததில் ஒரு பெண் விபத்துக்குள்ளாகி இறந்தார். இதையடுத்து, ‘பிளக்ஸ் பேனர்கள்’ வைக்க நீதிமன்றம் தடை விதித்தது. தி.மு.க, அ.தி.மு.க உட்பட பலகட்சியினர், ‘பிளக்ஸ் பேனர்கள் வைக்க மாட்டோம்,’ என உறுதியளித்து நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்தனர். ஆனால், தற்போது, அரசு வழிகாட்டுதல்கள், நீதிமன்ற உத்தரவுகள், கொடுத்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு மீண்டும் ஆளும் கட்சியினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்து வருகின்றனர். தமிழக அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. முன்னதாக அ.தி.மு.க ஆண்டபோது அவர்கள் கட்சியினர் வைத்த பேனர்களை தி.மு.கவினர் விமர்சனம் செய்திருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது. (பட உதவி: தினமலர்)