ஆக்சிஜன் ஏற்பாடு செய்த எம்.ஆர். காந்தி

நாகர்கோவில் மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் வசதி உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்திய நாகர்கோவில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர்.காந்தி, ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து, உடனடியாக நாகர்கோவிலுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் சிவனிடம் கேட்டுக்கொண்டார். மகேந்திரகிரியில் இருந்து உடனடியாக ஆக்சிஜன் கிடைப்பதற்கான வழி வகைகள் செய்யப்படும் என்று உறுதி அளித்தார் சிவன். இதனைத் தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதற்கு வழிவகை செய்த இஸ்ரோ நிறுவனத்திற்கும் அதன் தலைவருக்கும் சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது நன்றி தெரிவித்துள்ளார் எம்.ஆர். காந்தி.