பாரதத்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளன. அந்த வரிசையில், ‘அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை முற்றிலும் இலவசம். கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் 80 சதவீத கட்டணத்தை அரசே ஏற்கும். நோயளிகள் மீதம் 20 சதவீத கட்டணத்தை செலுத்தினால் போதும்’ என்று கோவா முதல்வர் சாவந்த் தெரிவித்துள்ளார்.