யார் குற்றம்?

உத்தரபிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் பஞ்சாயத்து தேர்தல்களில் ஆசிரியர்கள் உட்பட தேர்தல் பணியாளர்கள் 135 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். அரசியலமைப்பின்படி உ.பியில் பஞ்சாயத்து தேர்தல் 2021 ஜனவரி 13 அல்லது அதற்கு முன்னர் நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிப்போனது. கொரோனா இரண்டாவது அலை வரலாம். மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கடந்த ஜனவரியில் பிரதமர் மோடி கூறியிருந்தார். உ.பி முதல்வர் யோகி ஆதித்தியநாத்தும் இந்த நேரத்தில் பஞ்சாயத்து தேர்தலை நடத்துவது உசிதமல்ல என கூறியிருந்தார்.

ஆனால் நீதிமன்றம், தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என உத்தரவிட்டது. அதனால் தேர்தலை நடத்த வேண்டிய சூழலுக்கு ஆளானது உ.பி அரசு. தற்போது நீதிமன்றம், ‘தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காக்க காவல்துறையோ அல்லது மாநில தேர்தல் ஆணையமோ எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. மீதமுள்ள இடங்களில் தேர்தல்களை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும்’ என ஆணையிட்டுள்ளது.

ஒருவேளை அரசின் ஆலோசனையை நீதிமன்றம் கேட்டிருந்தால் இந்த விபரீதங்களை தடுத்திருக்கலாமோ? அரசு அல்லது மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மேல் முரையீடு செய்திருக்கலாமோ? தவறு யார் பக்கம்?

-மதிமுகன்