பாரதப் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி கொரோனாவை கட்டுப்படுத்த முப்படைகளும், அனைத்து அரசு அமைப்புகளும் வேகமாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும். மத்திய அரசு மிக சிறப்பாக செய்து வருகிறது. இந்த நிலையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்பதை. மறந்து விட்டு பாரதப் பிரதமரை கிண்டல் செய்யும் விதமாக கே.எஸ் அழகிரி கருத்து தெரிவித்து உள்ளார். இதற்கு பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை, ‘ஐயா. நீங்கள் ஒரு காமெடி கட்சியில் உள்ள ஒரு காமெடி நபர். ஒரு தேசியக் கட்சியில் உள்ள தமிழக மாநிலத் தலைவராக இருந்துகொண்டு 200 ரூபாய் பணம் வாங்கி கொண்டு பேசும் நபர் போல இந்த நிலைக்கு நீங்கள் வருவீர்கள் என நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார். மேலும், இதற்கு ஆதாரமாக ‘காங்கிரஸ் ஒரு வேடிக்கையான கட்சி. இது உலகின் மிகப்பெரிய அரசியல் அமைப்பு. ஆனால் அதற்கென ஒரு ஒழுங்கோ வழிமுறைகளோ இல்லை. ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் நாம் புதிய விதிமுறைகளை உருவாக்குவோம். அதன் பின்னர் அவற்றை தூக்கி எறிவோம். கட்சியில் என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது’ என்று கடந்த 2013ல் ராகுல் தெரிவித்துள்ள ஒரு சமூக ஊடகப்பதிவையும் இதற்கு ஆதாரமாக பதிவிட்டுள்ளார்.