பிரான்ஸ் நாட்டை எதிர்த்தும், அந்நாட்டு துாதரை வெளியேற்றக்கோரியும் பாகிஸ்தானில், தெஹ்ரீக் – இ – லாபாய்க் கட்சியினர் நடத்தும் வன்முறை போராட்டங்களால் பாகிஸ்தானில் போர் போன்றதொரு சூழல் நிலவுகிறது. இந்த வன்முறையில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அக்கட்சி தலைவர் சாத் உசேன் ரிஸ்வி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் அரசு அந்த கட்சியை தடை செய்துள்ளது. ஆயினும் தொடரும் வன்முறை போராட்டங்களைத் தடுக்க, னில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் – இ – லாபாய்க் கட்சியினர் நடத்தும் போராட்டங்களை தடுக்க ‘யு டியூப், வாட்ஸப், டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.