அமெரிக்காவை சேர்ந்த மூன்றவது பெரிய முன்னணி வங்கியான சிட்டி வங்கி, விரைவில் பாரதம், சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா, போலந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய 13 சர்வதேச சந்தைகளில் இருந்து சில்லறை வங்கி செயல்பாட்டு சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவைத் தவிர்த்து பிற சந்தைகளில் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சிட்டி குழுமம் சிங்கப்பூர், லண்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் என நான்கு சந்தைகளில் மட்டும் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இந்த வெளியேறும் நடவடிக்கை எப்போது நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.