வாரணாசியில் உள்ள ஞானவாபி கட்டமைப்பின் நிர்வாகக் குழுவும் அஞ்சுமான் இன்டெசாமியா மஸ்ஜித் குழுவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஞானவாபி கட்டமைப்பில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) தொல்பொருள் ஆய்வு செய்ய வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்கனவே இந்த விவகாரத்தில் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. ஆனால் வாரணாசி நீதிமன்றம் எதிர் தரப்பினரின் கருத்துக்களை இதில் விசாரித்து வருகிறது. எனவே இந்த உத்தரவு சட்டவிரோதம், அதிகார வரம்பு மீறல் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில், வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய சுன்னி வக்பு வாரியமும் முடிவு செய்துள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலை அழித்த முகலாய கொடுங்கோல் அரசன் ஔரங்கசீப்பால் ஞானவாபி மசூதி கட்டப்பட்டது. பண்டைய ஹிந்து கோயிலின் கட்டமைப்பை இப்போதும் கியான்வாபி மசூதியின் சுவர்களில் நாம் காணமுடியும்.