மத்திய அமலாக்க இயக்குநரகம் (இ.டி) சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ‘தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, அரசு அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி பல சட்டவிரோத சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். உள்ளூர் வர்த்தகர் மஜி என்ற லாலா, திருணமூல் இளைஞரணி பிரிவுத் தலைவர் வினய் மற்றும் அவரது சகோதரர் விகாஸ் மிஸ்ரா. அபிஷேக் பானர்ஜியின் குடும்பத்தினர் என பலருக்கும் இதில் தொடர்பு உள்ளது. 2 வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில், 1,352 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கத்தின் மூலம் மஜி சம்பாதித்துள்ளார். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு அரசியல் ஆதரவு, அதிகாரிகள் ஆதரவு மேலும் ஒரு பெரிய நெட்வொர்க்கின் துணையும் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அபிஷேக் பானர்ஜி, இந்த முறைகேடான வருமானத்தை லண்டன் மற்றும் தாய்லாந்தில் உள்ள தனது மனைவி மற்றும் மைத்துனி பெயரில் உள்ள கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். மேலும் அவர் மஜியிடமிருந்து 109 நாட்களில் 168 கோடி ரூபாய் அளவில் சட்டவிரோதமாக நிதியைப் பெற்றார்’ என தெரிவித்துள்ளது.