கிருஷ்ணார்ப்பணம் என்றால் என்ன?: பரதன் பதில்கள்

பரதன் பதில்கள்

 

தீண்டாமை  பற்றி  ஸ்ரீ ராமானுஜர்  கருத்தென்ன?

– வி. சாமிநாதன், தாம்பரம்

 

ஸ்ரீ ராமானுஜர் காவிரியில் குளிக்கச் செல்லும் முன்பு பிராம்மண சீடர்களின் தோளில் கை போட்டுச் செல்வார். குளித்து திரும்பி கோவிலுக்கு வரும்போது பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த உறங்காவில்லிதாசர் தோளில் கைபோட்டு வருவார். அவருக்கு ஜாதி வேறுபாட்டில் துளியும் நம்பிக்கை கிடையாது. தீண்டாமையை தகர்த்தெறிந்தார். இன்றைக்கு தலித் என்கிறார்களே…. அவர்களுக்கு ராமானுஜர் கொடுத்த பெயர் திருக்குளத்தார்…

 

 * குடும்ப  வாழ்க்கையில்   இருந்து கொண்டே ஆன்மிகத்திலும்  ஈடுபட முடியுமா?

– சுந்தரி ரமேஷ், வாணியம்பாடி

 

தாராளமாக முடியும். எத்தனையோ மகான்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஒரு கையால் குடும்ப வாழ்க்கையில் செய்யவேண்டிய கடமைகளைச் செய்துகொண்டே மற்றொரு கையால் இறைவனின் திருவடிகளைத் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

 

 கிருஷ்ணார்ப்பணம்  என்றால்  என்ன?

– பா. வேடியப்பன், காரைக்குடி

 

நமக்கு வருகின்ற இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அது இறைவனுக்கு சமர்ப்பணம் என்று நாம் பழகிவிட்டால் நமது மனம் பக்குவப்பட்டுவிடும். நீங்கள் தீவிர சைவராக இருந்தால் சிவார்ப்பணம் என்று சொல்லுங்கள்  எல்லாம் ஒன்றுதான்.

 

 இந்தியாவில்  மட்டும்தானே   இத்தனை  ஜாதி  சண்டைகளும்   பிரிவினைகளும்?

– கி. பூவரசன், வியாசர்பாடி

ஏராளமான முஸ்லீம் நாடுகளில் ஷியா, சன்னி சண்டைகள் ஓய்ந்த பாடில்லையே? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வெள்ளைத் தோலும், கறுப்புத் தோலும் மோதிக்கொள்கின்றனவே? சில நாடுகளில் அன்பு இஸ்லாமும் அன்பு கிறிஸ்தவமும் பரஸ்பரம் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனவே?  இதெல்லாம் பார்த்தால் நம்மநாடு எவ்வளவோ பரவாயில்லை.

 

நான் வெற்றி பெற்றால் முதலமைச்சர் ஆகமாட்டேன் என்று தினகரன் தெரிவித்துள்ளாரே?

– க. கேசவன், திருச்சி

 

முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், மற்றது பிறகு பார்க்கலாம். இதுபற்றி ரொம்ப கவலைப்பட வேண்டியவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே.

 

 * மகாபாரதத்தை  இழிவு படுத்தியதாக   கமல்ஹாசன்  மீது  வழக்குப்  பதிவாகியிருக்கிறதே?

– சி. பார்வதி, நாமக்கல்

 

நல்லவேளை… ஹிந்து மதத்தை இழிவுபடுத்தியதால் வழக்கோடு போச்சு. சமீபத்தில் கோவையில் ஃபாரூக் என்பவர் தி.க.வில் சேர்ந்து ‘அல்லா இல்லை’ என்றார். அடுத்து நீயே இல்லை என்று சொல்லி அவரை வெட்டி கொன்றே போட்டுவிட்டார்கள்.

 

 யோகி  ஆதித்யநாத்  .பிமுதல்வரானது   பற்றி சிலர்  விமர்சிக்கிறார்களே?

– கரு. முருகேசன், மதுரை

அவர் 26-வயதில் கோரக்பூர் நாடாளுமன்ற உறுப்பினர். தொடர்ந்து 5 முறை வெற்றி நாயகன். கட்டை பிரம்மச்சாரி. எளிமையானவர். நேர்மையானவர். பொது சேவையில் மிகுந்த ஈடுபாடுடையவர். அவரால் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்க முடியும். இத்தகைய குணங்கள் உள்ள ஒருவர் முதல்வரானால் ஆஒக எதிரணியினருக்கு ஆக எகிறத்தான் செய்யும்.

 

* ­­குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.