கோவை, ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தை துவக்கி, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, ஹிந்து கோயில்களை விடுவிக்கக் கோரிக்கை வைத்து வருகிறார். இதற்கு, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சியினர் என பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மிஸ்டு கால் ஆதரவு, சமூக வலைதள ஆதரவு என அமோகமாக மக்களின் அமோக ஆதரவு இதற்கு பெருகியுள்ளது. இந்நிலையில், மக்கள், தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயில், சென்னை காரணீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் என பிரசித்தி பெற்ற 11 கோயில்கள் முன்பு, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பக்தி பாடல்கள் பாடியும் ‘கோவில் அடிமை நிறுத்து’ பதாகையை ஏந்தியும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.