சோனியா காந்தி இந்து மதம் பற்றி கூறிய கருத்துகளை, ஆன்மிகப் பகுதியில் வெளியிட்டது ஓர் ஆங்கிலப் பத்திரிகை. இது இந்து மதத்தைக் கேலி செய்வது மட்டுமல்ல, இழிவு படுத்துவதும் கூடத்தானே! நமது பத்திரிகையாளர்களின் அறிவு மழுங்கிவிட்டதா?
அசோகரும், கனிஷ்கரும், ஆப்கானிஸ்தானை ஆண்டார்கள். துரியோதனனின் தாயான காந்தாரி, இப்பொழுது ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தார தேசத்திலிருந்து தான் வந்தார். அப்படியென்றால், முன்பு ஆப்கானிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை நம்புகிறீர்களா?
திரிபுராவில் உள்ள பாப்டிஸ்ட் சர்ச் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நியூசிலாந்திலிருந்து வந்த மதபோதகர்களால் நிறுவப்பட்டது. இந்த சர்ச் தேசியத்தை ஊக்குவிக்கும் என்று நம்புகிறீர்களா?
பாகிஸ்தானில் மாணவர்களுக்கு, இந்துக்கள் நமது விரோதிகள், அவர்கள் ஒருகாலும் நமது நண்பர்கள் ஆக முடியாது. இந்துக்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று கற்றுத்தரப்படுகிறது. இனியும் பாகிஸ்தானுடன் நட்புறவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று எண்ணுகிறீர்களா?
மதச்சார்பற்ற அமெரிக்காவில், புனித வெள்ளி அன்று சர்ச்சில் செய்வது போல் மதச் சடங்குகளை அதன் பாதுகாப்புத்துறையின் அலுவலகத்திலும் செய்கிறார்கள். அன்று மதப்பிரச்சாரகர்களை அழைத்து பாதுகாப்பு வீரர்களிடையே சொற்பொழிவாற்றச் செய்கிறார்கள். இந்திய ராணுவமோ, கப்பல் படையோ ஆயுதபூஜை கொண்டாடுவதையோ, சங்கராச்சாரியாரைப் பேச அழைக்கவோ முடியுமென்று கனவிலும் நினைக்க முடியுமா?
பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு, ஆனால், ஓர் இருதய அறுவை சிகிச்சைக்கோ, புற்றுநோய் சிகிச்சைக்கோ பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள். அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாடு ஏன் நல்ல மருத்துவமனைகளையும், திறமை வாய்ந்த மருத்துவர்களையும் உருவாக்கவில்லை. அப்படியென்றால், பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டின் வளர்ச்சியையும் மருத்துவ சேவைகளையும் காட்டிலும் துப்பாக்கிச் சுடுவதைத்தான் விரும்புகிறார்கள் என்று தானே அர்த்தம்?
கம்யூனிசத் தலைவர் ஸ்டாலின் மகள் ஸ்வேதலானா, தினேஷ் சிங்கின் சகோதரனை மணந்து கொண்டு இந்தியாவில் தங்க விரும்பினார். இந்திரா காந்தியும், நமது கம்யூனிஸ்டுகளும் அதனை எதிர்த்தனர். பிறகு எப்படி இத்தாலியப் பெண்மணியை ஏற்றுக்கொண்டார்கள்?
அமெரிக்காவில் யோகா பல கோடி மதிப்புள்ள ஒரு தொழிற்துறையாக வளர்ந்துள்ளது. ஆனால் முன்பு ஆண்டஇந்திய அரசாங்கமோ, இந்த மனித வளர்ச்சித் தொழில் நுட்பத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டது! இது இந்தியக் கலாச்சாரத்தைச் சார்ந்தது என்பதால்தானே?
பூஜையில் சங்கல்பம் செய்யும் போது பாரத வர்ஷே” பரத கண்டே” என்று சொல்கிறோமே, அது என்ன? இதற்குப் பிறகும் ஆன்மிகமும், தேசியமும் வேறு வேறு என்று நினைக்கிறீர்களா? அல்லது அவை தேசத்தின் இரண்டு கண்கள் எனக் கருதுகிறீர்களா?
ஆன்மிகத்தையும், தேசியத்தையும் இந்தியாவில் தனியாகப் பிரிக்க முடியாது. ஆன்மிகம் இல்லாத பாரதம், உயிரற்ற உடம்பாகிவிடும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?