தமிழகத்தில் பல்லாயிரம் கோயில்கள் முறையாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. தமிழக அரசின் அறநிலையத்துறை இதை வேடிக்கை பார்க்கிறது. நில அபகரிப்பு, பராமரிப்பின்மை, திருட்டு என அனைத்து விதத்திலும் ஊழல்கள் மலிந்துவிட்டன. இதற்கு ஒரேவழி அரசு ஆலயத்தை விட்டு வெளியேறுவதுதான். இதனை வலியுறுத்தி ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தை துவக்கியுள்ளார். அதற்கு எதிர்பார்த்ததைவிட அதிகமாக தமிழகமெங்கும் ஆதரவு பெருகிவருகிறது. தற்போது, கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ‘பயோகான்’ தலைவர் கிரண் மஜும்தார், முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் நாகேஸ்வர ராவ், நடிகைகள் கங்கனா ரணவத், கஸ்தூரி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீநிதி ஷெட்டி, ரவினா டான்டன், மவுனி ராய், திரைப்பட இயக்குனர் மோகன், பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் சி.டி ரவி உள்ளிட்ட பலர், டுவிட்டரில் ஆதரவு அளித்துள்ளனர். இதனால் தமிழக அளவில், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ‘ஹேஷ்டேக்’ டிரெண்டிங் ஆகியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட சிதிலமடைந்த கோயில்களின் வீடியோ, புகைப்படங்களை ஹிந்து பக்தர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சத்குருவும் அதனை பகிர்ந்துள்ளார்.