சி.பி.ஐ.எம் ஆதரவு வேட்பாளரான கே.டி.சுலைமான் ஹாஜி, பாகிஸ்தான், ராவல்பிண்டியை சேர்ந்த 19 வயதான பெண்ணை தனது இரண்டாவது மனைவியாக துபாயில் திருமணம் செய்துக்கொண்டார். இந்த விவரத்தை அவர் கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் சேர்க்காமல் தேர்தல் ஆணையத்தையும் மக்களையும் ஏமாற்றியுள்ளார் என மாத்ருபூமி பத்திரிகையின் செய்தி தெரிவிக்கிறது. முஸ்லிம் லீக் தலைவர்களும் இது குறித்து அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். ‘இதை குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனம் காப்பதை விடுத்து முதல்வர் பினராயி விஜயன் கேரள மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என பா.ஜ.க தலைவர் முரளிதரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.