பா.ஜ.க தேசத்தில் உள்ள அனைத்தையும் விற்கிறது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயம் ஆக்கப்படுகின்றன. அம்பானி அதானிக்கு மட்டுமே மோடி ஆதரவாக செயல்படுகிறார் என தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் என அனைத்து எதிர்கட்சிகளும், மாறி மாறி பொய் கூறி வருகின்றனர். ஆனால் இதனை ஆரம்பித்தது யார், அப்போது ஏன் இவர்கள் வாய்மூடி கிடந்தனர் என யாரும் சிந்திக்கவோ, உண்மையை பேசவோ தயாராக இல்லை.
உதாரணமாக, யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா என்ற அரசு நிறுவனத்தை நேரு ஆரம்பித்தார். ஆனால் இதனை அதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மன்மோகன் சிங் விற்றார். அதுதான் இன்றைய ஆக்ஸிஸ் வங்கி. ஏழைகளுக்கு வீட்டுக் கடனுக்காக நேரு ஆரம்பித்த ‘ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற அரசு நிறுவனத்தையும் அதே மன்மோகன் சிங்தான் விற்று தனியார் மயமாக்கினார். அதுவே தற்போது எச்.டி.எப்.சி வங்கி என தனியார் வங்கியாக செயல்படுகிறது.
இதேபோல தொழில்துறையினருக்கான கடன் வசதிக்காக ஆரம்பிக்கப்பட்ட இண்டஸ்டிரியல் கிரடிட் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவும் விற்கப்பட்டு ஐ.சி.ஐ.சி.ஐ என புகழ் பெற்ற ஒரு தனியார் வங்கியாக உள்ளது. தொழில் வளர்ச்சிக்காக உருவான ‘இண்ட்ஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆப் இந்தியாதான் தற்போதுள்ள ஐ.டி.பி.ஐ என்ற தனியார் வங்கி.
புகழ் பெற்ற நிதி ஆலோசகர், ரிசர்வ் வங்கி கவர்னர், சிறந்த நிர்வாகி, தேர்ந்த நிதியமைச்சர், நல்ல பிரதமர் என கங்கிரஸ்காரர்கள் புகழும் இதே மன்மோகன் சிங்தான் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் நாடாளுமன்றத்தில், ‘அரசாங்கத்தின் பணி வியாபாரம் செய்வதல்ல, அரசாங்கத்தின் பணி ஆளுகை மட்டுமே. மக்கள்தான் இந்த வேலைகளை செய்ய வேண்டும்’ என பொருள்படும் விதத்தில் ‘மேக்சிமம் கவர்னன்ஸ், லெஸ் கவர்மெண்ட்’ என கூறியவர்.
அது மட்டுமல்ல, முதன் முதலில் சாலை, பாலங்களை தனியார் நிறுவனங்களைக் கொண்டு உருவாக்கி, அந்த நிறுவனங்கள் அதற்காக கட்டண வரி வசூலிக்கலாம் என்ற அனுமதியை அளிக்கும் கட்டண வரிக் கொள்கையை கொண்டு வந்ததும் சோனியாவின் தலைமைக்கு கட்டுப்பட்ட மன்மோகன்சிங் அரசுதான். மேலும்,பல்வேறு துறைகளில் தனியார் மயமாக்கலை தொடங்கியதும் இவர்கள்தான். விமான நிலையம் தனியார் மயமாக்கலை அறிவித்து, டெல்லியின் இந்திரா காந்தி விமானநிலையத்தையே ஐம்பது ஆண்டுகளுக்கு ஜி.எம்.ஆர் குழுமத்திற்கு குத்தகைக்கு வழங்கியவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான்.
இப்படி அனைத்தையும் தனியார் மயமாக்க வித்திட்ட காங்கிரஸ், தி.மு.க கூட்டணியினர்தான் தற்போது இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து,
இன்று, பா.ஜ.கவின் தனியார் மயமாக்கலை எதிர்த்து போரடுவதுடன் அதனை திட்டமிட்டே மக்களிடம் தவறான தகவலாக பரப்பி அரசியல் செய்துகொண்டுள்ளனர்.
- மதிமுகன்