ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு கார் வழக்கில் தற்போது டொயோட்டா லேண்ட் குரூசர், மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய 2 சொகுசு கார்களை என்.ஐ.ஏ பறிமுதல் செய்துள்ளது. அவற்றில் ஒன்று விஜய்குமார் கணபத் போஸ்லே என்ற சிவசேனா தலைவருக்கு சொந்தமானது. கைப்பற்றப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் காரினை இதில் கைது செய்யப்பட்ட காவலதிகாரி சச்சின் வாஸே பயன்படுத்தி வந்துள்ளார். இதில் போலி நம்பர் பிளேட், ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவை இருந்துள்ளன. இதைத் தவிர, இவ்வழக்கில் தொடர்புடைய நீல மெர்சிடிஸ் மற்றும் ஸ்கோடா ஆகிய மேலும் இரண்டு கார்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. யூரி, பதான்கோட், புல்வாமா போன்ற பயங்கரவாத தாக்குதலில் என்.ஐ.ஏ என்ன சாதித்துள்ளது. இதை அவர்கள் பெரிதுபடுத்துகிறார்கள், கைப்பற்றப்பட்டவை 20 ஜெலட்டின் குச்சிகள்தானே என பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும், குற்றவாளிகளை காக்கும் நோக்கிலும் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். கைது செய்யப்பட்ட சச்சின் வாஸ், ‘இவை பனிப்பாறையின் முனை மட்டுமே’ என கூறியுள்ளார். இவை, இதன் பின்னால் மிகப்பெரிய பயங்கரவாத சதி, அரசியல் பின்புலம் இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.