அகில பாரதிய பிரதி நிதி சபா

ஆர்.எஸ்.எஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் துவங்கியது. இதில், ஆர்எஸ்எஸின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி உள்ளிட்ட பல முக்கியத் தலஒய்வர்கள் பலர் கலந்துகொண்டனர். பாரத மாதாவிற்கு மலர் தூவி பூஜை செய்து நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அகில பாரத ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர்  அருண்குமார்,  ‘அகில பாரதிய பிரதிநிதி சபாவில், தேசம் முழுவதிலும் உள்ள செயற்குழு பிரதிநிதிகள், தீபாவளிக்கு முன் நடைபெறும் இந்த சந்திப்பில் ஒன்று கூடுவர். சென்ற ஆண்டு அகில பாரதிய பிரதிநிதி சபா பெங்களூருவில் நடைபெற இருந்தது. ஆனால், கோவிட் காரணத்தால் நடைபெறவில்லை.

இதே காரணத்தால், 1500 பிரதிநிதிகளுக்கு பதிலாக, இந்த ஆண்டு 450 பேர் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறார்கள். அமர்வு மூன்று நாட்களுக்கு பதிலாக இரண்டு நாட்கள் மட்டுமே நடைப்பெறும். இதில் கடந்த மூன்று ஆண்டு கால திட்டங்கள் குறித்தும் ஆராயப்படும். கடந்த முறை நீர் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது நோக்கமாகக் கொண்டது. இந்த முறை அதன் விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கப்படும்.

வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நாக்பூரில் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தேர்தல்கள் நடைபெறும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில பாரத செயலாளர் (சர்கார்யவாஹ்) தேர்ந்தெடுக்கபடுவார். இந்த. தேர்தல் மார்ச் 20 அன்று காலை நடைபெறும். அதன் பின் பகல் 12.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு இருக்கும். ஆர்.எஸ்.எஸ், சஹ சர்கார்யவாஹ் அவர்களுடனான பத்திரிக்கையாளர் சந்திப்பில், சங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும், அடுத்த ஆண்டு சங்கம் எடுக்கக்கூடிய முடிவுகள் குறித்த தகவல்களையும் அறியலாம்’ என தெரிவித்தார்.