கொரோனா தடுப்பூசிகளை கனடா நாட்டிற்கு வழங்கியதை பாராட்டி, அந்நாட்டில் உள்ள ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாரதத்திற்கும் நன்றி தெரிவித்து கிரேட்டர் டொரண்டோ பகுதியில் உள்ள சாலையில், பிரம்மாண்டமான வாழ்த்துப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பாரதம் – கனடா நட்புறவு நீடிக்க வேண்டும் என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக கனடா பிரதமர் சீனாவுக்கு ஆதரவு நிலைப்பாடு, விவசாய பிரச்சனையில் மூக்கை நுழைப்பது என பாரதத்திற்கு எதிராக செயல்பட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு அங்குள்ள மக்களுக்கு உதவ கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பி வைத்துள்ளது.