அசாம் அரசு, 1.13 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் (D-Voters) அம்மாநிலத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது, அங்கு திருட்டுதனமாக குடியேறிய பங்களாதேஷிகள் உட்பட 680 வெளிநாட்டினர் தற்போது ஆறு தடுப்பு மையங்களில் உள்ளனர். 1985 முதல் 2019 வரை வெளிநாட்டினர் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது 4,32,944 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரிபார்ப்பு சோதனைகளுக்குப் பிறகு, 1,26,998 பேர் வெளிநாட்டினராகவும், 1,18,367 பேர் இந்தியர்களாகவும், 29,890 பேர் நாடு கடத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது அம்மாநிலத்தில் 1,13,738 டி-வாக்காளர்கள் இருக்கின்றனர் என அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் சார்பில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி சட்டமன்றத்தில் தெரிவித்தார்.