அமெரிக்காவின் ‛கார்னெல்’ பல்கலைக்கழக பேராசிரியரும், பாரத முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கவுஷிங் பாசுவுடன், காங்கிரஸின் ராகுல் இணைய வழியில் கலந்துரையாடினார். அப்போது, ‘கடந்த 1975 முதல் 1977 வரை, என் பாட்டி இந்திராவால் அமல்படுத்தப்பட்ட ‛எமர்ஜென்சி’ முற்றிலும் பிழையான ஒன்று. அது குறித்து, பாட்டி என்னிடம் பல முறை கூறி இருக்கிறார்’ என்றார். பின்னர் எதிர்கட்சித் தலைவர் என்பதால், ஆளும் பா.ஜ.க அரசையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் வழக்கம்போல எந்த முகாந்திரமும் இல்லாமல் வசைபாடினார்.