பாரத – சீன எல்லைப் பகுதியில் இருந்து, இரு நாட்டு படைகளும் கடந்த வாரம் வாபஸ் பெற்றன. அதனைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ படைத் தலைவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், இதர சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்தும் படை வாபஸ் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாரத வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், 75 நிமிடங்கள் உரையாடினார். அதில், ‘எல்லையில் ஏற்கனவே இருந்த நிலையை சீனா தன்னிச்சையாக மாற்ற முயன்றதன் விளைவாகவே இரு தரப்பு உறவுகளும் பாதிக்கப்பட்டது’ என குறிப்பிட்டுள்ளார். மற்ற சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்தும் படைகள் வெளியேற வேண்டியதன் அவசியத்தையும் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.