வைர வியாபாரத்திற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கிய நிரவ் மோடி, பணத்தை கட்டாமல் கடந்த 2019ல் பாரதத்தில் இருந்து லண்டனுக்கு தப்பி ஓடினார். இந்த முறைகேட்டை, சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டார் நிரவ். அவரை பாரதத்திற்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத்துறை மேற்கொண்டது. இவ்வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பில், நிரவ் மோடியை பாரதத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடைமுறைகள் விரைவில் துவங்கும். பாரதம் வந்த பிறகு நிரவ் மோடி கைது செய்யப்படுவார்.