கார்ட்டூனுக்கும் ஹிஜாப்

ஈரானிய தலைவர் அயதுல்லா கமேனி, அந்த நாட்டு அரசு ஆதரவு செய்தி நிறுவனமான தஸ்னிமுக்கு அளித்த பேட்டியில், ‘கார்ட்டூன் போன்ற கற்பனை கதாபாத்திரங்களுக்கு ஹிஜாப் அணிவது தேவையில்லை என்றாலும், ஹிஜாப் அணியாததன் விளைவுகள் காரணமாக அனிமேஷனில் ஹிஜாப்பைக் கவனிப்பது அவசியம்’ என குறிப்பிட்டிருந்தார். அவர் என்ன ‘விளைவுகளை’ குறிப்பிடுகிறார்என்பதை விளக்கவில்லை. அந்நாட்டு சமூக ஆர்வலர்கல் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ‘சிறுமிகள் வளர்ந்த பிறகு ஹிஜாப் அணிய மாட்டார்கள்’ என்று அவர் அஞ்சுவதாக கூறுகின்றனர்.