வி.வி.மினரல்ஸ் நிர்வாக இயக்குனர் வைகுண்டராஜன் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் அவர் பல்வேறு சதி செயல்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு சாதகமாக உதரவுகளைப் பெற்றது என பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவருக்குரிய தண்டனை என்ன, எவ்வளவு என்பது டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தால் இன்று அறிவிக்கப்படும்.