கோத்ராவில் 19 ஆண்டுகளுக்கு முன் சபர்மதி எக்ஸ்பிரஸை எரித்து, அதில் அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு சென்ற 59 கரசேவகர்களை உயிரோடு எரித்தது ஒரு மதவெறி கும்பல். இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவனான ரபீக் உசேன், கோத்ரா அருகில் உள்ள, ‘சிக்னல் ஃபாலியா’ என்ற பகுதியில் ஒரு வீட்டில் இருந்ததை அறிந்த காவல்துறை அங்கு சோதனை நடத்தி அவனைக் கைது செய்தது. இவன் 19 ஆண்டுகளாக டெல்லியில் தலைமறைவாக இருந்துள்ளான். இந்த பயங்கரவாத செயலில் இவனுடன் துணையாக இருந்த சலீம் இப்ராஹிம் பாதம், ஷவுகத் சர்கா, அப்துல்மாஜித் யூசுப் மிதா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். அவர்கள் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.