ஆட்சியாளரைவிட.. மன்னிக்கவும், ஏன் ஆண்டவனைவிட..நான்தான் என நினைக்கும் உங்களின் சிலருக்கு…இந்த தற்குறியின் உளம்திறந்த மடல்..
பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு விடுமுறையை ரத்து செது விட்டது”–இனி விடுமுறை இல்லை…என ‘ஸ்குரோல்’ — தற்போது …‘பிரேக்கிங் நியூஸ்’ — என பொளந்து கட்டினீர்களே!
இதில் உண்மை இல்லை என தெரிந்தும் ஏன் போட்டீர்கள்?
இதுதான் ‘புது ஊடக தர்மமா?’
கடந்த 10 ஆண்டுகளாக ‘பொங்கல்’ கட்டாய விடுமுறை அட்டவணையில் வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியுமல்லவா?
பின் ஏன் பொங்கலுக்கு விடுமுறை இல்லை என பச்சைப் பொ சோன்னீர்கள்?
மாநிலங்களில் உள்ள மத்திய அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்புகுழு உறுப்பினர்கள்தான் மாநில விடுமுறையை தீர்மானிக்கின்றனர். அதாவது அந்த 3 சிறப்பு விடுமுறை தினத்தை முடிவு செகின்றனர் என்பது உங்களுக்கு தெரிந்தும் இதில் மோடியையும் பாஜகவையும் மத்திய அரசையும் பழித்து ஏன் உண்மையை மறைத்தீர்கள்? பொக்குத் துணை போனீர்கள்?
2017ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விடுமுறைகள் 24.06.2016 அன்று அறிவிக்கப்பட்டு விட்டடதும், 14.01.2017 அன்று பொங்கல் அன்று சனிக்கிழமை அரசின் பொது விடுமுறை வருவதால், தசரா அன்று இன்னொருநாள் கூடுதல் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என 23.11.2016 அன்று கூடிய அரசு ஊழியர் குழு முடிவுசெததை நீங்கள் மறைத்து செதி வெளியிட்டது ஏன்?
இப்போது பொங்கலன்று கட்டாய விடுமுறை உங்கள் கூப்பாட்டினால் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதிலும் மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை. அரசு ஊழியர் ஒருங்கிணைப்பு குழுதான் இந்த மாற்றத்தையும் அறிவித்தது. இதிலும் கூட மத்திய அரசு பணிந்ததாக ஏன் பொ செதி வெளியிட்டீர்கள்?
ஒருநாள் அதிக விடுமுறை கிடைத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு உங்களால் இப்பொது ஒருநாளை ரத்து செது அவர்கள் வயிற்றெரிச்சலை ஏன் கொட்டிக்கொண்டீர்கள்?
நீங்கள் போட்ட பரபரப்பு செதியை மத்திய அரசின் இணைய தளங்களில் உறுதிசெது கொள்ளாத ‘வீர’மணியும் சசியும் ஸ்டாலினும் வைகோவும் ஒப்பாரி அறிக்கை வெளியிட்டு இப்போது தலைகுனிந்து நிற்க நீங்கள் ஏன் காரணமானீர்கள்?
இவர்கள் மீது உங்களுக்கு என்ன கோபம்?
அத்தனை தலைவர்களும் உண்மையை ஊர்ஜிதம் செதுகொள்ளாமல் அறிக்கை வெளியிட்டு அவமானப்பட்டபோது, உண்மைதெரிந்து முழு ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ், டாக்டர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போன்றோர் அறிக்கையை இருட்டடிப்பு செததுதான் உங்கள் பத்திரிகை தர்ம லீலாவினோதமா?
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரிய (2008 – மதுரை உயர்நீதிமன்றம்) விலங்குநல வாரியம், பீட்டா அமைப்புகள், ஜல்லிக்கட்டு காளையின் முதல் காலை உடைத்தது!
தமிழகத்தில் 3,000 இடங்களில் நடந்து கொண்டிருந்த இந்த வீர விளையாட்டை திமுக (2009 ஜல்லிக்கட்டு ரெகுலேஷன் சட்டம்) 3 இடமாக குறைத்தது. காளையின் இரண்டாவது காலை உடைத்தது!
காட்சி விலங்கு பட்டியலில் இருந்து வெளியே எடுத்து காங்கிரஸ் (2011 ஜூலை 11 கெஜட் வெளியீடு) 3வது காலை உடைத்தது!
பீட்டாவும், விலங்கு வாரியமும் கலெக்டர் கண் முன்னமே ஜல்லிக்கட்டு காளை படும் துயரை வீடியோ எடுக்கும்போது அதை கைப்பற்றாமல் பார்த்துக் கொண்டிருந்த (2014 அலங்காநல்லூர் / வில்லாபுரம் / பாலமேடு ஜல்லிக்கட்டுகள்) அதிமுக அரசு காளையின் 4வது காலையும் உடைத்தது!
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் (7.5.2014 தீர்ப்பு) ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடைசெய்து காளையை புதைகுழியில் தள்ளியது!
இப்படி செய்தவர்கள் இன்று நீலிக்கண்ணீர் வடிப்பதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்டாமல், பாஜகவின் மீது குற்றம் சாட்டுவது எந்த ஊர் நியாயம்?
நீதிபதிகள் நியமன சட்டத்தையே செல்லாது எனச் சொன்ன உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் அதை உடனே செல்லாதது ஆக்கிவிடும் என்ற உண்மையை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?
ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு சிறந்த பொருளாதார சீர்திருத்தம் என்று பல பொருளாதார மேதைகள் வரவேற்கும் போது நீங்கள் மட்டும் ஏன் இதற்கு எதிரான ‘திசை திருப்பும்’ செய்திகளை வெளியிடுகிறீர்கள்?
ஏறத்தாழ 30,000 கோடி அளவு எண்ணிக்கையில் சுழன்று கொண்டிருந்த ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் 50 நாளில் மக்களிடம் சென்றடைந்துவிட முடியுமா? ஏன் வேண்டுமென்றே இதை பரபரப்பாக்குகின்றீர்கள்?
தலைசுமை வியாபாரிகளும் காய்கறிக் கடைக்காரர்களும் ரொக்கமில்லா மாறுவதற்கு காலம் பிடிக்காதா? இப்படி மாறியவர்கள் பற்றி செய்தி வெளியிடாமல், ஏடிஎம் க்யூ பற்றியே வெளியிடுவது ‘பரபரப்பு செய்தி’ மட்டுமே உங்கள் ‘போகஸ்’ என எடுத்துக் கொள்ளலாமா?
உங்களுக்கு சமூகப் பொறுப்பு என்பதே கிடையாதா? அல்லது ‘சாம்பிளுக்கு’ ஒரு சில செய்திகளை மட்டும் வெளியிட்டு ‘உங்கள் சமூகப் பொறுப்பு’ பக்கத்தை மூடி வைத்து விடுவீர்களா?
‘நான்தான் முதலில் சொன்னேன்’ என்பதற்காகவும், அவர்கள் சொல்லிவிட்டார்கள், நானும் சொல்லவேண்டும் என்பதற்காகவும் ‘தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்’ என்ற பயத்திலும் நீங்கள் செயல்படுவது நல்லதா?
மொகம்மது யூனுஸ், ஜூன் டைரோஸ் போன்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்கள், மோடியின் நோட்டு அறிவிப்பு பொருளாதார சீர்திருத்தத்திற்கு ‘சபாஷ்’ போட்டது போன்ற நல்ல செய்திகள் உங்கள் கண்களுக்கு படாதா?
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! நாட்டின் வளர்ச்சியில், சமூக மாற்றத்தில் உங்கள் பங்கு என்ன? அதை நீங்கள் எந்தளவு நிறைவேற்றுகிறீர்கள்?
வெறும் வியாபாரம்! பரபரப்பு! போட்டி! கிசுகிசு, ஊர்வம்பு! இது தான் மீடியாவின் முகவரியா?
பாஜகவும் மோடியும் உங்களுக்கு பிடிக்காமல் போனால் அதை புரிந்துகொள்ள முடிகிறது!
ஆனால் செய்திகளும் விமர்சனங்களும் ‘நேர்மைக் கோட்டை’ தாண்டினால், அதை கச்டிஞீ ணஞுதீண் (காசு வாங்கி செய்தி) அல்லது வெறுப்பு வியாபாரம் என்பதாக மட்டுமே எடுத்துக் கொள்ளமுடியும்!
வெறுப்பே வியாபாரமாகக் கொண்டிருந்த ஊடகங்களை மக்கள் வெறுத்த காரணத்தால் தான் உங்களை கொண்டுவந்திருக்கிறார்கள்!
நீங்களும் அதே பாதையை தொடர்ந்தால் உங்களுக்கு பின்னால் ‘அடுத்த குழு’ நிற்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்!
எவ்வளவு பெரிய குழுமமாக இருந்தாலும் எவ்வளவு பணம், அரசியல் செல்வாக்கு இருந்தாலும், மக்கள் செல்வாக்கை இழந்தீர்களானால், என்ன ஆகும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை, சரித்திரம் தொடர்ந்து சொல்லி வருகிறது!
ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் ‘நேர்மைக்கு என்றும் அழிவில்லை! பொய்மையும் பொல்லாங்கும் வென்றதில்லை!’