ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போன்ற போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அரசு பணி வழங்க அஸ்ஸாம் அரசு ஒருங்கிணைந்த விளையாட்டுக் கொள்கையில் திருத்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில், அர்ஜுனா விருது பெற்ற அஸ்ஸாமிய தடகள வீராங்கணை ஹிமாதாஸுக்கு, காவல்துறையில் துணை கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஹிமாதாஸ், “இச்செய்தி தனக்கு பெரிய உந்துதல் அளித்துள்ளது. எனது மாநிலத்துக்கும், தேசத்துக்கும் சேவை செய்வதற்கு பெருமைபடுகிறேன்” ஏன கூறினார். மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஹிமாதாஸை வாழ்த்தி பாராட்டியுள்ளார்.