சட்டப்பிரிவு 370 ரத்துக்கு, பின்னர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தவர் மெஹபூபா முப்தி. இவரது பி.டி.பி கட்சியின் ராஜ்யசபா எம்.பி மிர் முகமது ஃபயாஸ். இவரது பதவிக்காலம் முடியவுள்ளது. அதையொட்டி நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு செய்துள்ள முயற்சிகளை பாராட்டினார். விறகுகளைப் பயன்படுத்திய பெண்களுக்கு உஜ்வாலா எரிவாயு வழங்கப்பட்டதற்கு நன்றி கூறினார். ஜெ.பி. நட்டா, தர்மேந்திர பிரதான், ஜிதேந்திரசிங் தோமர் போன்றோரும் மறைந்த அருண் ஜெட்லியும் தங்கள் மாநில பிரச்சனைகளை தீர்க்க எவ்வாறெல்லாம் உதவினர் என்று விவரித்தார். முன்பு 5 லட்சம் மட்டுமே தொகுதி வளர்ச்சிகாக ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்து கோடி ஒதுக்கப்படுகிறது என பாராட்டினார். முன்னதாக குலாம்நபி ஆசாத் குறித்து மோடியின் புகழ்ச்சியுரையும், குலாம்நபி ஆசாத் ‘நான் பாரத முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்ற பேச்சும் மக்களால் அதிகம் பாராட்டப்பட்டது.