சுவிடனைச் சேர்ந்த இளவயது சு ற்றுசூழல் போராளி கிரிட்டா தன்பர்க், தன் டிவிட்டரில் விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதில், இந்த போராட்டம் குறித்த தகவலை எப்படி கொண்டு செல்ல வேண்டும். எப்படி ஒரேடியாக ஒருசேர குறிப்பிட்ட பிரிவினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அந்த டிவிட் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் காணப்படுகிறது. குடியரசு தினத்தன்று என்னென்ன கலவரங்கள் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதனை வெளிப்படுத்தி, உலகத்தின் பார்வையில் பாரதத்தின் நற்பெயரை சிதைக்கும் வகையில் அனைத்து தலைவர்களையும் ஒன்றுசேர டேக் செய்வது, குறிப்பாக மூன்று போட்டோக்களை அதிகமாக அனைவரும் பகிர்வது, பல்வேறுவிதமான நெருக்கடிகளை பாரதத்திற்கு தொடர்ந்து உருவாக்குவது, அதானியையும், அம்பானியையும் விரட்டி விட்டால் இந்த நாடே வளம் பெரும் என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்குவது போன்ற தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இவரின் இந்த பதிவு விவசாய போராட்டத்தின் பின்னால் உள்ள சர்வதேச சதியை உலகிற்கு பறைசாற்றி உள்ளது.