கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை தன் மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருவதுடன் பல நட்பு நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும் இலவசமாக அளித்து வருகிறது பாரதம். ஆனால் பயங்கரவாத நாடான பாகிஸ்தானோ யார் தனக்கு கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக தருவார்கள் என தினமும் காத்திருக்கிறது. குறிப்பாக சீனாவின் சினோபார்மா தயாரித்துள்ள சினோவேக் மருந்தை எதிர் பார்த்திருக்கிறது. சீனா 5 லட்சம் சினோவேக் மருந்தை தருகிறோம் என கூறியுள்ளது. ஆனால் அம்மருந்து 73 விதமான பக்கவிளைவுகளை தரும் என சீன மருத்துவர் டாவ் லினா கூறியதும், 50.38 சதவீதம்தான் வேலை செய்கிறது என பிரேசில், இந்தோனேஷியா தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.