தமிழகத்தின் மிக மூத்த ஸ்வயம்சேவகரும். 1944 முதல் சங்கத்தின் பொறுப்பாலாளருமான நஞ்சப்ப செட்டியார் (97) அவர்கள் நேற்று ( 25.12.2020) காலமானார். 1948ல் சங்கத்தை தடை செய்த பொழுது இவரது வீட்டில் தான் மூத்த பிரச்சாரக் அமரர் சிவராம் ஜி தங்கி சங்க வேலை செய்தார். அன்று முதல் இன்றுவரை அவரது குடும்பம் மட்டுமல்ல அவர்களது உறவினர்கள் அத்தணை பேரும் சங்க குடும்பங்களாக செயல்படுவதற்கு காரணமாக இருந்தவர். தமிழகத்திற்க்கு பரம பூஜனீய குருஜி வரும்போது அதிகமான முறை தங்கியிருந்தது இவர் வீடு தான்.
அந்த காலத்தில் ஸ்ரீ குருஜி பயணிப்பதற்கு இவருடைய கார் தான் அதிகமாக பயன்படுத்தபட்டது. முன்னால் நமது பிராந்த பிரச்சாரக் கோபால்ஜீயும் தமிழகத்தை மூன்று முறை நஞ்சப்ப செட்டியார் அவருடைய புல்லட்டில் தான் பயணம் செய்துள்ளார்.
1)விவேகானந்தர் நினைவுச் சின்னம் அமைக்கும் பணிக்காக
2 )விஸ்வ ஹிந்து பரிஷத் துவக்கும் பணிக்காக
3) சத்ரபதி சிவாஜியின் 300வது முடிசூட்டுவிழாவிற்க்காக இந்த மூன்று காலத்திலும் திரு.நஞ்சப்பா ஜீயின் புல்லட் தான் கோபால்ஜியுடன் தமிழக முழுவதும் பயணம் செய்தது.
பல ஆண்டுகாலம் ஆர் எஸ் எஸ்ஸின் சென்னை மாநகர தலைவராக பொறுப்பு வகித்தார். இன்றும் அவரது மகன்களும் பேரன்களும் சங்க பொறுப்பில் உள்ளனர்.
அவரது ஆன்மாநற்கதி அடைய பிராத்திக்கிறோம்.