கர்சன் பிரபுவின் வங்கப் பிரிவினையை கண்டு கொதித்துப்போன அரவிந்தர் விடுதலைப் போராட்டாத்தில் ஈடுபட்டார். தேச விடுதலைக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், “வந்தேமாதரம்” என்ற இதழை ஆரம்பித்தார் பின், சந்திரபாலுடன் இணைந்து கூட்டங்களில் கலந்துகொண்டு, ஆங்கில அரசுக்கு எதிராக பேசினார். இதனால் இருமுறை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ‘கர்மயோகி’ என்ற ஆங்கிலப் பத்திரிக்கை, ‘தர்மா’ என்ற வங்காள பத்திரிக்கை மூலமும் மக்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டும் கட்டுரைகளை எழுதி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். சிறையில் இருந்த நேரங்களில் அவர் கீதை, வேதங்கள் என ஆன்மீக நூல்களைப் படித்த அவருக்கு, யோக நெறியில் அதிகம் அக்கறை பிறந்தது. பாண்டிச்சேரி வந்தார். அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆன்மீகத்தில் ஈடுபட்டார் அரவிந்தர்.